பெருசு vs ஸ்வீட் ஹார்ட் : பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளியது யார்?

கோலிவுட்டில் கடந்த மார்ச் 14ந் தேதி திரைக்கு வந்த ரியோவின் ஸ்வீட் ஹார்ட் மற்றும் வைபவ் நடித்த பெருசு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Perusu vs SweetHeart Box Office : தமிழ் சினிமாவில் வார வாரம் ரிலீஸ் ஆகும் புதுப்படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் 14ந் தேதி தமிழில் மொத்தம் 10 படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படங்கள் என்றால் அது பெருசு மற்றும் ஸ்வீட் ஹார்ட் திரைப்படங்கள் தான். இதில் பெருசு படத்தை கார்த்திக் சுப்புராஜும், ஸ்வீட் ஹார்ட் படத்தை யுவன் சங்கர் ராஜாவும் தயாரித்து இருந்தனர்.

Perusu Box Office

பெருசு படம் சிங்கள படத்தின் ரீமேக் ஆகும். இதில் வைபவ் ரெட்டி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை இளங்கோ ராம் இயக்கி இருந்தார். இது ஒரு அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி பின்னணி இசையை அமைத்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் வசூலும் பெரியளவில் இல்லை. இப்படம் மூன்று நாட்களில் ரூ.2.5 கோடி தான் வசூலித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்... “பெருசு”க்கு காமெடி கைகொடுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ


Sweetheart Box Office

மறுபுறம் ரியோ நாயகனாக நடித்த ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையமைத்தும் இருந்தார். ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமான இதில் ரியோவுக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடித்திருந்தார். ஜோ பட வெற்றிக்கு பின் ரியோ நடித்த படம் இது என்பதால் இதற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யாததால் ஸ்வீட் ஹார்ட் படத்தின் வசூலும் பெரியளவில் இல்லை. இப்படம் மூன்று நாட்களில் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாம்.

Dragon

பெருசு படத்தை காட்டிலும் ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் வசூலில் பின் தங்கி இருக்கிறது. வார இறுதி நாட்களிலேயே இந்த இரண்டு படங்களின் வசூலும் பிக் அப் ஆகாததால் அடுத்த வார நாட்களில் மேலும் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த படங்களைக் காட்டிலும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் அதிக வசூலை வாரிக்குவித்து உள்ளது. அப்படம் நான்கு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்...  ரிலீசாகி 25 நாளாகியும் குறையாத கூட்டம்; பாக்ஸ் ஆபிஸில் அடுத்த மைல்கல்லை நெருங்கும் டிராகன்!

Latest Videos

click me!