மலையாள நடிகர் மம்முட்டிக்கு கேன்சரா? காட்டுத்தீ போல் பரவிய தகவல் - உண்மை என்ன?

Published : Mar 17, 2025, 08:23 AM IST

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதாக செய்திகள் பரவி வந்தன.

PREV
14
மலையாள நடிகர் மம்முட்டிக்கு கேன்சரா? காட்டுத்தீ போல் பரவிய தகவல் - உண்மை என்ன?

Mammootty Cancer Rumours : மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லை என பரவிய செய்தியால் அவரது ரசிகர்கள் கவலையடைந்து இருந்தனர். 73 வயதாகும் மம்முட்டிக்கு புற்றுநோய் வந்திருப்பதால் அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துதிருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தன. ஏனெனில் கடந்த சில நாட்களாக மம்முட்டி வெளி உலகத்துக்கு தலைகாட்டாமல் இருந்து வந்தார். அதனால் அவருக்கு புற்றுநோய் என தகவல் பரவியது. இந்த நிலையில் மம்முட்டியின் உடல்நிலை குறித்து அவரது பி.ஆர்.டீம் விளக்கம் அளித்துள்ளது. 

24
Mammootty

அதன்படி மம்முட்டிக்கு கேன்சர் இல்லை என அவருடைய பி.ஆர் டீம் உறுதி படுத்தி உள்ளனர். மேலும் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவர் தற்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருக்கிறார் என கூறி உள்ளனர். இதுபற்றி மம்முட்டியின் பி.ஆர் டீம் பேசும்போது, "இது பொய்யான செய்தி. அவர் லீவுல இருக்காரு. ரம்ஜானுக்கு நோன்பு இருக்கறதால ஷூட்டிங்ல இருந்து பிரேக் எடுத்துருக்காரு. பிரேக் முடிஞ்சதும் டைரக்டர் மகேஷ் நாராயணன் படத்துல மோகன்லாலோட சேர்ந்து நடிப்பார்"னு சொல்லியுள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்து சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

34
Mammootty health

மகேஷ் நாராயணன் டைரக்‌ஷனில் MMMN படத்தோட முதல் ஷெட்யூல் ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கப்பட்டது. மலையாள சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கிற படம் இது. இந்த படத்துக்கு 'MMMN' (மம்முட்டி, மோகன்லால், மகேஷ் நாராயணன்)னு பேரு வச்சிருக்காங்க. இந்த படத்தில் மம்முட்டி, மோகன்லாலோடு நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கிறார்கள். இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

44
Actor Mammootty Upcoming Movies

மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம்னு 420 படங்களில் நடித்துள்ள மம்முட்டி கடைசியாக 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தை கெளதம் மேனன் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து தற்போது 'பஜூகா', 'கலாம்கவல்' என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் மம்முட்டி. இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

இதையும் படியுங்கள்... 73 வயது நடிகருடன் ஜோடி சேருகிறாரா லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா?

Read more Photos on
click me!

Recommended Stories