நானி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கேங் லீடர் படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் பிரியங்கா மோகன். இப்படத்தில் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி வெற்றிபெற்ற எதற்கு துணிந்தவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு - பிரியங்கா மோகனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் படமும் ஹிட் ஆனது.
இவர் நடிப்பில் தற்போது டான் திரைப்படம் உருவாகி உள்ளது. சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியங்கா. இவர்கள் இருவரும் இதற்கு முன் ஜோடியாக நடித்த டாக்டர் திரைப்படம் வெற்றிவாகை சூடியதால், டான் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் வருகிற மே 13-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதுதவிர நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 169 படத்திலும் நடிகை பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.