Sruti Nakul : அடிக்கடி வரும் ஆபாச வீடியோ... ஒரே டார்ச்சரா இருக்கு - பகீர் கிளப்பிய நடிகர் நகுலின் மனைவி.!

Published : Apr 23, 2022, 10:17 AM IST

Sruti Nakul : நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் ஒருவர் ஆபாச வீடியோக்கள் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
14
Sruti Nakul : அடிக்கடி வரும் ஆபாச வீடியோ... ஒரே டார்ச்சரா இருக்கு - பகீர் கிளப்பிய நடிகர் நகுலின் மனைவி.!

நடிகை தேவயானியின் சகோதரனான நகுல், கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் குண்டான தோற்றத்துடன் இருந்த நகுல், பின்னர் தீவிர உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார்.

24

இதையடுத்து 2008-ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நகுல், இதையடுத்து மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

34

தற்போது இவர் கைவசம் எரியும் கண்ணாடி, வாஸ்கோடகாமா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் நகுல். நடிகர் நகுல் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. விரைவில் இத்தம்பதிக்கு 2-வது குழந்தை பிறக்க உள்ளது.

44

இந்நிலையில், நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் ஒருவர் ஆபாச வீடியோக்கள் அனுப்பியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், ஆபாச வீடியோக்களுடன் ஐ லவ் யூனு அனுப்பி உள்ளார். இது மாதிரி மெசேஜ் எனக்கு வருவது முதல்முறை அல்ல. இதுபோல ஆபாச வீடியோக்களும் பலமுறை வந்துள்ளன” எனக் கூறி பகீர் கிளப்பி உள்ளார். அவரின் இந்த பதிவுக்கு சமூக வலைதளவாசிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Dhanush : பீஸ்ட் மோடுக்கு மாறும் அசுரன்... நெல்சனின் அடுத்த டார்கெட் தனுஷ்!

click me!

Recommended Stories