சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தன்னுடைய திறமையான நடிப்பாலும் , அழகாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பிரியா பவானி ஷங்கர், தமிழ் திரையுலகில் தற்போது படு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
டாப் நடிகர்கள் படம் முதல், வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் படம் வரை சுமார் பத்து படங்களுக்கு குறையாமல் தன்னுடைய கை வசம் வைத்துள்ளார்.
இவருடைய அசுர வளர்ச்சி, வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நாயகிகளுக்கு சற்று கடுப்பை கிளம்பினாலும், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல துடிக்கும் நடிகைகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும், பிரியா பவானி ஷங்கர் இந்த லாக் நேரத்தில் ஒர்க் அவுட் மூலம் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதை தொடர்ந்து தற்போது ஜிமில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி... கியூட் புன்னகையுடன் போஸ் கொடுத்து... ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ என தன்னை தானே கலாய்த்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.