கிரிக்கெட் வீரரை மணக்க போகும் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா..! மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..!

First Published Jun 25, 2021, 11:22 AM IST

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இவரை திருமணம் செய்து கொள்ள போகும் கிரிக்கெட் வீரர் குறித்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.
 

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.
undefined
இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2 ' படம் இடியாப்ப சிக்கலில் இருந்தாலும், அந்த பட பிரச்சனை முடிவதற்கு தெலுங்கு ஸ்டார் ராம் சரண் மற்றும் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் படங்களை இயக்க தயாராகி விட்டார்.
undefined
இந்நிலையில் ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
undefined
இந்த நிலையில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் வரும் 27 ஆம் தேதி, பொள்ளாச்சியில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாக பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.
undefined
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் ஒரு மருத்துவர் ஆவர், இவர் மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.
undefined
தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்காததால், இவர் சில காலம் இலங்கையில் சென்று விளையாடியதாகவும், பின்னர் தன்னுடைய தந்தை தாமோதரனின் முயற்சியால், புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்க்கு கேப்டனாகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தன்னுடைய படங்களுக்கு பிரமாண்ட செட் போடுவதை போலவே, மகளின் திருமணத்திற்கும் பிரமாண்ட செட் போடா திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இதற்காக எந்திரன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய முத்துராஜ் செட் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
undefined
click me!