பாலிவுட் படத்தில் டாப் ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா?

Published : Jun 25, 2021, 11:55 AM ISTUpdated : Jun 25, 2021, 11:59 AM IST

பிரபல இயக்குனர் இயக்க உள்ள படத்தில், டாப் நடிகர் ஒருவருக்கு நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

PREV
18
பாலிவுட் படத்தில் டாப் ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் ஒருவர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் 'ராஜா ராணி'  படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

28

இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

38

என்னதான் அட்லீ மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 

48

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமா கால் பாதிக்க ஆயத்தமாகியுள்ளார். அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து இவர் படம் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

58

இந்த படத்திற்கான கதையையும், ஷாரூக்கானிடம் கூறி அட்லீ சம்மதம் வாங்கி விட்டதால், இந்த வருடத்தின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

68

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், அட்லீ ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் தீயாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

78

ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான, 'ராஜா ராணி' மற்றும் 'பிகில்' ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்தார். ஒருவேளை ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால், தமிழ், தெலுங்கு, மலையாளத்தை கடந்து, பாலிவுட் திரையுலகிலும் சில காலம் வெற்றி நாயகியாக வளம் வருவார்.

88

இந்த தகவல் குறித்து இது வரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இது உறுதி செய்யப்படுகிறதா? அல்லது வதந்தியாகவே கடந்து செல்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!

Recommended Stories