Priya Bhavani Shankar Marriage : தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான ராஜவேலுவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கரின் திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. நீண்ட காலமாக காதலித்து வரும் ராஜவேலுடன் அவர் திருமணக் கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கருக்கு திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் பிரியா பவானி சங்கர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் வெள்ளை நிற உடையில் ராஜவேல் இருக்கிறார். இருவரும் திருமண மாலைகளை அணிந்திருக்கும் நிலையில், ராஜவேல் தாலி கட்டும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பே பிரியா பவானி சங்கரின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்களிடையே சில சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ராஜவேலுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் மல்லிகைப்பூ மாலை அணிந்திருந்தனர். மற்றொரு பதிவில் கைகளில் மருதாணி அலங்காரத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், திருமண ஏற்பாடுகள் ஏதேனும் நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பினர். ஆனால், திருமணம் குறித்து அவர் எந்தவிதமான விளக்கத்தையும் அப்போது அளிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள வீடியோ யூகங்களை உண்மை ஆக்கி உள்ளது.
34
அனிருத் திருமண எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த சர்ப்ரைஸ்!
இன்று அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் பேசப்பட்டு வரும் நிலையில், பிரியா பவானி சங்கரின் திருமண வீடியோ சர்ப்ரைஸ் ஆக வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அனிருத் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் பகிராமல் இருப்பதாக ரசிகர்கள் பேசிவரும் சூழலில், பிரியாவின் வீடியோ வெளியாகியிருப்பது மற்றொரு ஆச்சரியமாக அமைந்துள்ளது.
இதனால் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, திருமணம் குறித்த தகவலை முன்கூட்டியே அறிவிக்காமல் இருந்தாலும், திருமணக் காட்சிகள் தற்போது வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருப்பதாகக் கருத்துகள் பகிரப்படுகின்றன.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியா பவானி சங்கர். பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். கல்லூரிப் பருவத்திலிருந்தே ராஜவேலுடன் காதலில் இருந்து வரும் பிரியா, பல ஆண்டுகளாகத் தங்களது உறவைத் தொடர்ந்து வருகிறார். இருவரும் கடந்த ஆண்டு புதிய வீட்டைக் கட்டி கிரகப்பிரவேசமும் நடத்தியிருந்தனர்.
அப்போது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு விரைவில் நடைபெறும் எனப் பதிலளித்திருந்தார் பிரியா. இந்நிலையில், தற்போது சர்ப்ரைஸாக திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். திருமணம் சீக்ரெட்டாக நடந்து முடிந்தாலும், கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியை திரைப்பிரபலங்கள் சூழ பிரம்மாண்டமாக நடத்த இந்த ஜோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.