பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்! சூப்பர் ஹிட் இயக்குனர் படத்தில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார்!

நடிகை பிரியா பவானி ஷங்கர் அடுத்தது பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருவதால்... பல இளம் நடிகைகள் இவரின் அசுர வளர்ச்சியை கண்டு வாய் பிளப்பதாக கூறப்படுகிறது.
 

priya bhavani shankar pair with vishal 34th movie directed by hari

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து... தற்போது சுமார் அரை டஜன் படங்களுடன் படு பிசியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், ஏற்கனவே இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்த 'யானை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி உள்ளது அவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
 

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில்,  இயக்குநர் ஹரி - விஷால் வெற்றிகூட்டணி இணையும் "விஷால்-34"  படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கியுள்ள நிலையில், இதில்  விஷால் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை'  படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு,  நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன்  இணைந்து பெரும் பொருட்செலவில்,  பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர்.  

குமரேசன் ரெடி! விறுவிறுப்பாக நடந்து வரும் 'விடுதலை' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு.. சூரி வெளியிட்ட வீடியோ!


இது விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போதைக்கு "விஷால்-34" என அழைக்கப்பட்டு வருகிறது.  நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் முதல்முறையாக விஷால் ஜோடியாக இணைகிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்து,  நல்ல கதையம்சம், உறவுமுறை, காமெடி, விறுவிறுப்பான ஆக்‌ஷன் என ரசிகர்களுக்கு தொடர்ந்து  விருந்து படைத்து வரும், இயக்குநர் ஹரி, இப்படத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில், அனைவரும் தாங்கள் வாழ்வில் தங்களைப் பாதித்த, கடந்து வந்த சம்பவங்களை நினைவு கொள்ளும் வகையில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். 

இப்படம் குறித்து விஷால் கூறுகையில், என் திரை வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர் இயக்குநர் ஹரி. அவருடன் இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப்போல இந்தப்படமும் அழுத்தமான கதை, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடன், ஆக்சனும் கலந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமையும் என தெரிவித்துள்ளார்.  

20 வயசு இளம் ஹீரோயின் போல் இருக்கும் ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் பிறந்தநாள் போட்டோஸ்
 

இசையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, புஷ்பா படம் மூலம் 5 மொழிகளிலும் ஹிட் தந்த இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்,   "ஆறு, வேங்கை, சாமி, சிங்கம்1, சிங்கம் 2, படங்களை தொடர்ந்து மீண்டும்  இயக்குநர் ஹரி இயக்கம் 'விஷால் 34' படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பையனூரில் உள்ள பெப்ஸிக்கு சொந்தமான அரங்கில்,  ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனின் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் துவங்கியது. மேலும்  சென்னையை அடுத்து, தமிழ்நாட்டின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படமாக்கப்படவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படம் குறித்த  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தான் இலியானாவின் காதலரா? ஒருவழியா குழந்தை பிறக்கும் முன் கர்ப்பத்திற்கு காரணமானவர் முகத்தை காட்டிய நடிகை!

Latest Videos

click me!