சூப்பர் ஹீரோவாக உருவெடுக்கும் சிவா தற்போது ஒரு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் மாறி வருகிறார். ஏற்கனவே வெளியான இவருடைய மாமன்னன் திரைப்படம் வெளியான வெகு சில நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை தொட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பாக்ஸ் ஆப்பில் அதிக கலெக்ஷன் கொடுத்த டாப் 3 திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் முதலாக 50 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 முதல் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் 51 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
குமரேசன் ரெடி! விறுவிறுப்பாக நடந்து வரும் 'விடுதலை' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு.. சூரி வெளியிட்ட வீடியோ!