அப்படி இவர் நடித்த மன்மதன் திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கவனிக்க வைத்தது. இதை தொடர்ந்து, தன்னுடைய அண்ணன் இயக்கிய சென்னை 28 படத்திற்கு பின்னர் பிரேம்ஜியின் காமெடி மட்டும் அல்ல, பாடி லாங்குவேஜும் அதிகம் கவனிக்கப்பட்டது. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். குறிப்பாக தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஹீரோவுடனே பயணிக்கும் காமெடியன் வேடத்தில் கவனம் ஈர்த்தார்.
சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு பிரேம்ஜி வளர்ந்த போதிலும்... இவர் நடித்த படங்கள் படுத்து விட்டதால், தற்போது வரை காமெடியனாகவே நீடித்து வருகிறார். மேலும் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' படத்திலும் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் பிரேம்ஜி திடீர் என தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டார்.