பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் தண்டிப்பார் – ஜாய் கிரிசில்டா!

Published : Sep 05, 2025, 09:34 PM IST

Joy Crizildaa X Page Post viral : போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் சற்று சைலண்டாக இருந்த ஜாய் கிரிசில்டா மீண்டும் தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

PREV
15

Joy Crizildaa X Page Post viral : சமையல் கலைஞரும், தொழிலதிபரும், குக் வித் கோமளி சீசன் 6 நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் தான் இப்போது அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜிற்கு வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அப்போது அவர் 6 மாதம் கர்ப்பம் என்பது குறிப்பிடப்படத்தக்கது. மாதம்பட்டி ரங்கராஜைப் போன்று ஜாய் கிரிசில்டாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். கிரிசில்டா மற்றும் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

25

அதன்பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் உடன் பழக்கம் ஏற்படவே அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அதோடு, அவரை காதலிக்கவும் செய்துள்ளார். இருவரும் ஒன்றாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா அடிக்கடி மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

35

மேலும், தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு வைக்க போகும் பெயர் கூட தேர்வு செய்துள்ளார். இந்த சூழலில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது முதல் மனைவி ஸ்ருதி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் ஜாய் கிரிசில்டா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.

45

இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்-தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

55

அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.

இந்த நிலையில் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் சற்று சைலண்டாக இருந்த ஜாய் கிரிசில்டா தனது மன வேதனையை வெளிப்படுத்து விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories