உன்னை இன்னிக்கு சாப்பிடாம விட மாட்டேன்: ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலுக்கு புரபோஸ் செய்த மொரட்டு சிங்கிள் பிரேம்ஜி!

Published : Feb 14, 2023, 10:15 PM IST

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் பிரேம்ஜியும் இன்றைக்கு ஐ லவ் யூ சோ மச் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.  

PREV
16
உன்னை இன்னிக்கு சாப்பிடாம விட மாட்டேன்: ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலுக்கு புரபோஸ் செய்த மொரட்டு சிங்கிள் பிரேம்ஜி!
பிரேம்ஜி

பிரேம்குமார் கங்கை அமரன் என்ற பிரேம்ஜி, தன்னை ஒரு பாடகராகவும், இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும் சினிமாவில் காட்டிக் கொண்டார். இவர் பிரேம் என்பது இவரது பெயர் ஜி என்பது இவரது தந்தையின் முதல் எழுத்து. நாளைடைவில் பிரேம்ஜி என்பதே இவரது பெயராகிவிட்டது. கடந்த 1997 ஆம் ஆண்டு வாண்டேடு என்ற படத்தை இயக்கினார்.

26
பிரேம்ஜி

இதில், வெங்கட் பிரபு மற்றும் எஸ்பிபி சரண் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்தார். கங்கை அமரன் மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் இருவரும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு பாதியிலேயே நின்றதாக சொல்லப்படுகிறது.
 

36
பிரேம்ஜி

கடந்த 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த புன்னைகை பூவே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு விசில், கண்ட நாள் முதல், வல்லவன், சென்னை 600028, சத்தம் போடாதே, தோழா, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, கோவா, மங்காத்தா, போடா போடி, சலீம், வடகறி, நாரதன், சிம்பா, மாநாடு, மன்மத லீலை, பிரின்ஸ் என்று பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.
 

46
பிரேம்ஜி லவ் புரபோஸ்

ஞாபகம் வருதே, துணிச்சல், நெஞ்சத்தை கில்லாதே, தோழா, மாங்கா, ஜாம்பி, அச்சமின்றி, ஆர்கே நகர், கசட தபற, தமிழ் ராக்கர்ஸ், மன்மத லீலை, பார்ட்டி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  காலத்துக்கேத்த ஒரு கானா, ஆனந்தம், யு ராக் மை வேர்ல்டு, பூம் பூம், தீ பிடிக்க, சரோஜா சாமான் நிக்காலோ, பனிவிழும் காலம் என்று ஏராளமான பாடல்களை பிரேம்ஜி பாடியுள்ளார்.
 

56
பிரேம்ஜி

அவ்வவ்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தான். தற்போது 45 வயதாகும் அவர், இவரை திருமணம் செய்து கொள்வார், அவரை திருமணம் செய்து கொள்வார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.
 

66
பிரேம்ஜி

ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பாடகி வினிதாவும், பிரேம்ஜியும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் பிரேம்ஜி காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலை புரபோஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஹேப்பி வேலண்டைன்ஸ் டே...உனக்கு 18 வயசு தான் ஆகுது.....ஐ லவ் யூ சோ மச், நான் உன்னை இன்னிக்கு சாப்பிடாம விட மாட்டேன் என்று பேசியுள்ளார், கடைசியில பார்த்தால் Chivas Regal 18 என்ற சரக்கு பாட்டில். அதனிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்த காதலர் தினத்திலும் பிரேம்ஜி சிங்கிள் தான் என்பது தெளிவாகிறது.
 

https://twitter.com/Premgiamaren/status/1625385113826754560?s=20&t=TriSis6XtfQbGUFY9FlmoA

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories