விஜய் - வம்சி கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 66. தில் ராஜு தயாரிக்கும் இப்ப்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் நடிகர் சரத்குமார் இப்படம் மூலம் நடிகர் விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். தளபதி 66 படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. முதலில் பிரசாந்த்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் நடிக்க மறுத்துவிட்டதால், பின்னர் நடிகர் மோகனை அணுகினர். தற்போது அவரும் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் நடிக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் அந்தகன் என்கிற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்தும் ஹீரோவாக நடிக்கவே பிரசாந்த் விரும்புவதால் அவர் அண்ணன் ரோலில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம்.