Dragon : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய பிரதீப்; டிராகன் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

Published : Feb 22, 2025, 07:35 AM IST

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

PREV
14
Dragon : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய பிரதீப்; டிராகன் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
Pradeep Ranganathan Dragon Movie

கோமாளி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே ஒரு இயக்குனராக முத்திரை பதித்த பிரதீப்புக்கு, இரண்டாவது படத்திலேயே ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர், லவ் டுடே என்கிற தரமான படத்தை இயக்கி அப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகம் ஆனார். கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த லவ் டுடே திரைப்படம் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்து பிரதீப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

24
Dragon Movie Response

லவ் டுடே படத்துக்கு பின்னர் ஹீரோவாக பிசியான பிரதீப், டைரக்‌ஷனை ஓரம்கட்டி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். லவ் டுடே வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த படம் டிராகன். இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... Dragon Review : டிராகன் விமர்சனம் : லவ் டுடே மேஜிக் பிரதீப்புக்கு மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா?

34
Dragon Movie Collection

டிராகன் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். டிரைலர் மூலமே எதிர்பார்ப்பை எகிற வைத்த இப்படம் பிப்ரவரி 21ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன டிராகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. லவ் டுடே படத்தை போல் டிராகன் படத்தை நெட்டிசன்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன.

44
Dragon Day 1 Box Office Collection

இந்நிலையில், டிராகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. உலகளவில் இப்படம் 7.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் லவ் டுடே படத்தின் முதல் நாள் சாதனையை முறியடித்து உள்ளார் பிரதீப். லவ் டுடே திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.6 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், டிராகன் திரைப்படம் அதைவிட 1.5 கோடி கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... டிராகன் பெரிய வெற்றி படம்! பேசும்போது அழுத பிரதீப் ரங்கநாதன்! கண்கலங்கிய இயக்குநர் அஸ்வத்!

Read more Photos on
click me!

Recommended Stories