இந்த நிலையில் "மயில்வாகனன்" என்கின்ற கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் அவர்களும், "பரசுராம்" என்கின்ற கதாபாத்திரத்தில் மூத்த தமிழ் திரையுலக இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ் ரவி குமாரும் இணைந்து நடித்துவருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் Youtube மூலம் தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற வி.ஜே சிந்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர்.
அது மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக திகழ்ந்துவரும் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபல ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த திரைப்படம் இப்போது உருவாகி வருகிறது.
ஜெயிலர் 2; அந்த படம் முடிந்ததும் பான் இந்தியன் நடிகருடன் இணைகிறாரா நெல்சன்? லேட்டஸ்ட் அப்டேட்!