இயக்குனராக அறிமுகமான மிக குறுகிய காலத்திலேயே... 50 கோடி சம்பளம் பெரும் இளம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள அட்லீயின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இந்த பதிவில் பார்போம்.
தமிழ் சினிமாவில் பிக் பட்ஜெட் படங்களை இயக்கி, பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் இயக்குனராக மாறியவர் அட்லீ. 2013 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா, ஜெய், ஆகியோர் நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' படத்தை இயக்கி தன்னுடைய முதல் படத்திலேயே திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்தார். மேலும் இவர் இயக்கிய 'ராஜா ராணி' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
26
Thalapathy Vijay Favorite Director Atlee
இந்த திரைப்படம், ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'மௌன ராகம்' படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து எடுக்கப்பட்டது போல் இருக்கிறது, என சில விமர்சனங்கள் எழுந்தபோதும்... இப்படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படமாக மாறியது.
இதைத்தொடர்ந்து அட்லீ எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தை, தளபதி விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து விஜய்யுடன் கைகோர்த்து மெர்சல், பிகில், என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி ஹர்டிக் வெற்றியை கொடுத்தார்.
பின்னர் அதிரடியாக கோலிவுட் திரை உலகில் இருந்து, பாலிவுட் திரையுலகில் பக்கம் சென்று, ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் படத்தை இயக்கினார் அட்லீ. இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி, ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. மேலும் இந்த படத்தை தயாரித்ததன் மூலம், நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி காணும் நல்ல லாபத்தை பார்த்தார்.
46
Jawan Movie Director Atlee
ஜவான் படத்தை இயக்கும் போது, ஷாருக்கான் தன்னுடைய மகன் போதை பொருள் விஷயத்தில் சிக்கி ஜெயிலுக்கு சென்றதால், திடீர் என இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு... மனதளவில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். ஆரியன் கான் ரிலீஸ் ஆன பின்னரே... மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவங்கி, படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
'ஜவான்' படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய அடுத்த படத்தை புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து அட்லீ இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் புஷ்பா படத்தின் ரிலீஸுக்கு பின்னர் அட்லீ இயக்க உள்ள, இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் அட்லீ-யின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருவது அவருடைய மனைவி ப்ரியா தான். அட்லீ நடிகை கிருஷ்ண பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு, காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு , அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இன்று அட்லீ மற்றும் அவருடைய மனைவி பிரியா இருவரும் தங்களுடைய பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், இவர்களுடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் அட்லீ, முன்னணி நடிகர்கள் பலர் நடிக்க விரும்பும், இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக உள்ளார்.
66
Atlee Networth
அட்லீ கடைசியாக இயக்கிய ஜவான் திரைப்படத்திற்கு சம்பளமாக சுமார் 30 கோடி வரை பெற்ற நிலையில்... அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ள, திரைப்படத்திற்கு 50 கோடி பெற உள்ளதாக கூறப்படுகிறது. பிறப்பிலேயே வசதியான குடும்பத்தை சேர்ந்த இயக்குனர் அட்லீக்கு, ஏற்கனவே கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும், இவர் உழைத்து சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு 50 முதல் 60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
அட்லீ திரைப்பட இயக்கத்தை தாண்டி, தயாரிப்பாளராகவும் உள்ளார். தெறி படத்தின் ரீமேக்காக உருவாகும் பேபி ஜான் படத்தை இவர் தயாரித்து வருகிறார். தமிழிலும் சில படங்களை அட்லீ தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார் கலெக்ஷனில் அதிக ஆர்வம் கொண்ட அட்லீ, BMW, ஆடி, மினி கூப்பர் போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.