நகைச்சுவை புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குபிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
28
NaaiSekarReturns
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைகிறார்., இந்த படத்தின் நாய்களுடன் வடிவேலு செம்ம கெத்தாக அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தியில் வெளியானது.
38
NaaiSekarReturns
தன் படப்பிடிப்பு பணிகள் துவங்கி விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று லண்டனில் படமாக்கப்பட்டது.
இதில் நாய் சேகராக வடிவேலு, நாய் சேகரின் மகள் சிவாங்கி கிருஷ்ணகுமார் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி,ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ராவ் ரமேஷ், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சஞ்சனா சிங், லொள்ளு சபா சேசு, பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கான பாடலை உருவாக்க வடிவேலு உள்ளிட்ட குழு லண்டன் சென்று திரும்பிய போது வடிவேலு மற்றும் இயக்குனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதையடுத்து சிறிது காலம் தள்ளிப்போன படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
78
naai sekar returns
இந்நிலையில் நேற்று வடிவேலு - பிரபுதேவா ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நின்ற வீடியோ வெளியானது. அதில் வடிவேலு சிங் இந்த தி ரெயின் என்னும் பாடலை பாடியபடி இருந்தார். 'பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்திருக்கும் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
88
naai sekar returns
இந்த விடியோவிற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக லைக்கா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனம் இயக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதோடு படக்குழு இருக்கும் புகைப்படமும் வெளியானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.