பாக்ஸ் ஆஃபீஸ் மான்ஸ்டரான கே.ஜி.எஃப்..4 நாட்களில் வசூலை வாரிக்குவித்து சாதனை..

Kanmani P   | Asianet News
Published : Apr 18, 2022, 07:57 PM ISTUpdated : Apr 18, 2022, 07:59 PM IST

கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 இதுவரை உலகம் முழுவதும் வசூல் செய்த தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான 4 நாட்களில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

PREV
17
பாக்ஸ் ஆஃபீஸ் மான்ஸ்டரான கே.ஜி.எஃப்..4 நாட்களில் வசூலை வாரிக்குவித்து சாதனை..
kgf 2

கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றி ரசிகர்கள் மனதில் அடுத்த பாகத்திற்கான விதையை பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைத்து விட்டது. 

27
kgf 2

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன்  காத்திருந்த இரண்டாம் பாகம்  பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது.

37
kgf 2

இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், சரண், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

47
kgf 2

தமிழ் ,தெலுங்கு,கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உலகம்முழுவதும் மாஸ் காட்டி வருகிறது.

57
kgf 2

பன்மொழி ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் ஜி.எஃப் 2 பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.  முதல் நாளே ரூ.134 கோடி வசூலித்து சாதனை படைத்தது. 

67
kgf 2

இதற்கிடையே  கே.ஜி.எஃப் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்டும், மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் சேர்ந்தே ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. 

77
kgf 2

இந்நிலையில் படம் வெளியான 4 நாட்களில் எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்னும் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுதும் இதுவரை சுமார் ரூ. 546 கோடியை வசூலித்துள்ளது.

click me!

Recommended Stories