ஏற்கனவே வலிமை படம் இரண்டரை வருட காத்திருப்புக்கு பின்னர் வெளியானதால் அடுத்தடுத்த படங்களை காலதாமம் இல்லாமல் கமிட் ஆகிறார் அஜித். அந்த வகையில் அஜித் 63 படத்திற்காக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்கள் உருவாகி இருந்தது. இதையடுத்து 5 வது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.