100 கோடி சம்பளம் கேட்டாரா விஜய்? அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட்மென்ட் கொடுத்த தயாரிப்பாளர்..

Kanmani P   | Asianet News
Published : Apr 18, 2022, 05:22 PM IST

விஜய் படங்களில் நடிப்பதற்காக 100 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டு கறார் செய்வதாக பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.

PREV
18
100 கோடி சம்பளம் கேட்டாரா விஜய்? அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட்மென்ட் கொடுத்த தயாரிப்பாளர்..
beast

தளபதி விஜயின் சமீபத்திய வெளியீடான பீஸ்ட்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

28
beast

இந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரம்  நடித்துள்ளனர்.
 

38
beast

உலக முழுவதும் 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள பீஸ்ட் 5  நாட்களில் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் சொல்கிறது.

48
beast

அனிருத்  இசையில் வெளியான இந்த படத்தின் மூன்று பாடல்களும் நல்ல வெற்றியை பெற்று தந்தது. அதோடு டிரைலரும் வேற லெவல் பீஜியமுடன் வெளியாகி ஆர்வத்தை தூண்டி இருந்தது.

58
BEAST

ஆனால் கடந்த 13-ம் தேதி வெளியான பீஸ்ட் போதுமான வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதோடு கலவையான விமர்சங்களை மட்டுமே பெற்று வருகிறது. இதனால் முதல் நாள் வசூலை காட்டிலும் மற்ற நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை போதுமான அளவு பெறவில்லை. 

68
BEAST

மிக பிரமாண்ட அடுக்குமாடி வணிகவளாக செட்டில் உருவான இந்த படம் சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படமாக்கபட்டத்து. அதோடு இந்த படத்திற்கான ரூ 175 கோடி பட்ஜெட்டில் 100 கோடிக்கு மேல் சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  

78
BEAST

இந்நிலையில் சமீபத்தில் ஆதார் ட்ரைலர் விழாவில் பேசிய அருண் பாண்டியன் அதிக சம்பளம் வாங்கும் அஜித்,விஜய் போன்ற நடிகர்களால் தான் தமிழ் சினிமாவின் தரம் குறைந்துள்ளதாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

88
BEAST

அதே பணியில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கே ராஜன்.. விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய இவர்,  65 கோடி சம்பளம் வாங்கி வந்த ஹீரோ இப்போது 110 கோடி சம்பளம். ஓகே என்றால் வாங்க இல்லனா வராதீங்க என தயாரிப்பாளர்களுக்கு கட் அண்ட் ரைட்டாக கூறுகிறார் என பேசியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories