கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2-ம் பாகத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, அதனை பூர்த்தி செய்யும் வகையில் வந்த படம் தான் கே.ஜி.எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இப்படத்தை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட்டனர்.