DON movie : சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்படுகிறதா? - பின்னணி என்ன?

Published : Apr 18, 2022, 03:20 PM IST

DON movie : டான் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
15
DON movie : சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்படுகிறதா? - பின்னணி என்ன?

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் டான். அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கி உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

25

டான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை ஜலபுல ஜங்கு மற்றும் பே ஆகிய 2 பாடல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு பாடல்களுமே ஹிட் ஆனதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார்.

35

டான் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை முதலில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். அன்றைய தினம் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டது. பின்னர் வருகிற மே 13-ந் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.

45

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மே 13-ந் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக, அதாவது மே 5-ந் தேதியே இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்த எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. 

55

மே 20-ந் தேதி உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரிலீசாக உள்ளது. அதற்கு ஒரு வாரம் முன்னர் டான் படம் ரிலீசானால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக டான் படத்தை ஒரு வாரம் முன்னதாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Yash : ‘களவாணி’ படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யாஷ் நடிச்சிருக்காரா....! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories