மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த தி ராஜா சாப் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.
மாருதி தசரி இயக்கத்தில் உருவான 'தி ராஜா சாப்' திரைப்படம், ஜனவரி 9ம் தேதி அன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியானது. இது ஒரு பான்-இந்தியா ஹாரர் காமெடி படம் என்பதாலும், பிரபாஸ் முதன்முதலில் இந்த ஜானரில் நடித்திருந்ததாலும் இப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இதில் பிரபாஸ் உடன் சஞ்சய் தத், மாளவிகா மோகனன், ரித்தி குமார், நிதி அகர்வால், ஜரீனா வஹாப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
25
சொதப்பிய தி ராஜா சாப்
மிகப்பெரிய பில்டப்போடு ரிலீஸ் ஆன ராஜா சாப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. இப்படம் பிரீமியர் மூலம் ரூ.9.15 கோடியும், முதல் நாளில் ரூ.53.75 கோடியும் வசூலித்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் கடுமையாக சரிந்ததால், 15 நாட்களில் தியேட்டர்களில் இருந்து இப்படம் தூக்கப்பட்டது. பிரபாஸ் ஏன் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்தார் என்பதே படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.
35
தி ராஜா சாப் வசூல்
பாக்ஸ் ஆபிஸில் 'தி ராஜா சாப்' படம் ஒரு டிசாஸ்டர் என்றே சொல்லலாம். ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இப்படம், இந்தியாவில் ரூ.143 கோடி மட்டுமே வசூலித்தது. அதுவே உலகளவில் ஒட்டுமொத்தமாக ரூ.205 கோடி வசூலித்து, படுதோல்வி அடைந்தது. நடிகர் பிரபாஸின் கெரியரில் பிரம்மாண்ட தோல்விப் படங்கள் லிஸ்ட்டில் ஏற்கனவே ராதே ஷியாம், ஆதிபுருஷ் போன்ற படங்கள் இருந்த நிலையில், அதில் லேட்டஸ்டாக தி ராஜா சாப் படமும் இணைந்திருக்கிறது.
தியேட்டரில் படுதோல்வி அடைந்த 'தி ராஜா சாப்' திரைப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில், வருகிற பிப்ரவரி 6ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் இப்படம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தியேட்டரில் வெளியான 28 நாட்களுக்குப் பிறகு, ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்படத்தை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். 'தி ராஜா சாப்' படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை தயாரிப்பாளர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
55
ஓடிடி வெளியீட்டில் ட்விஸ்ட்
இந்த ஓடிடி வெளியீட்டிலும் ஒரு ட்விஸ்ட் உள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடத்தில் மட்டுமே படம் வெளியாகும். இந்தி பதிப்பு பின்னர் வெளியிடப்படும். ஏனெனில் இதன் இந்தி வெர்ஷன் 8 வார ஓடிடி டீலிங் போடப்பட்டு உள்ளதால் இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. தியேட்டரில் வெளியான போதே பயங்கரமான ட்ரோல்களை சந்தித்த தி ராஜா சாப் திரைப்படம் ஓடிடிக்கு வந்தால் என்னென்ன கேலி கிண்டல்களையெல்லாம் சந்திக்கப்போகிறதோ என பிரபாஸ் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.