சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த பராசக்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு மைல்கல் படமாக கருதப்பட்ட பராசக்தியில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார்.
25
பராசக்திக்கு கலவையான விமர்சனம்
அதர்வா, சிவகார்த்திகேயனின் சகோதரராக நடித்ததும், ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் வந்ததும் படத்திற்கான ஹைப்பை இன்னும் அதிகரித்தது. இதனுடன் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட கதையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. திரையரங்குகளில் வெளியான முதல் சில நாட்களில் பராசக்தி நல்ல வசூலை பதிவு செய்தது. ஆனால் படம் முழுவதுமாக ரசிகர்களை கட்டிப்போடவில்லை என்ற விமர்சனமும் சமமாக எழுந்தது.
35
பராசக்தி வசூல் எவ்வளவு?
“சுதா கொங்கராவின் முந்தைய படங்களில் இருந்த தாக்கம் இதில் முழுமையாக இல்லை” என்று சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், தயாரிப்பு தரப்பு இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் டிராக்கர்களின் தரவுகள் படி பராசக்தி ஒட்டுமொத்தமாகவே வெறும் 85 கோடி தான் வசூலித்துள்ளதாம். பொங்கல் விடுமுறைகள் முடிவடைந்ததும், புதிய படங்கள் திரைக்கு வந்ததால் பராசக்தியின் வசூல் வேகம் குறைய தொடங்கியது. ஆரம்பத்தில் கோடிகளில் வந்த வசூல், தற்போது லட்சங்களாக சரிந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பராசக்தியின் ஓடிடி ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் 28 நாட்களுக்குள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகினாலும், பராசக்தியை 48 நாட்கள் கழித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால், படம் பிப்ரவரி மாத இறுதியில் தான் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படம் முன்கூட்டியே ஓடிடிக்கு வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி பராசக்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
55
ஓடிடியில் கவனம் பெறுமா பராசக்தி?
முக்கியமாக, பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 (ZEE5) தளம் கைப்பற்றியுள்ளது. அதனால் திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள், அல்லது மீண்டும் படம் பார்க்க விரும்புபவர்கள், பிப்ரவரி 7 முதல் ஜீ5-ல் பராசக்தியை காணலாம். மொத்தத்தில், தியேட்டர்களில் கலவையான வரவேற்பை பெற்ற பராசக்தி, ஓடிடி வெளியீட்டின் மூலம் இரண்டாவது சுற்றை தொடங்க தயாராகியுள்ளது. டிஜிட்டல் ரிலீஸுக்குப் பிறகு ரசிகர்களின் கருத்து எப்படி மாறும் என்பதே இப்போது சினிமா வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.