மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள தி ராஜா சாப் திரைப்படம் 4 நாட்களில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருபவர் தான் தென்னிந்திய நடிகர் பிரபாஸ். பாகுபலி 2 மூலம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த பிரபாஸ், இந்தியாவின் நம்பர் ஒன் பான்-இந்திய சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படுகிறார். பிரபாஸ் நாயகனாக நடித்து ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் 'தி ராஜா சாப்'. இப்படம் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், 4வது நாள் முடிவில் உலகளாவிய வசூல் 180 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
24
புதிய சாதனையை நெருங்கும் பிரபாஸ் படம்
தெலுங்கில் மட்டும் 'தி ராஜா சாப்' 95 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பிரபல வர்த்தக ஆய்வாளர்களான சாக்னில்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் வெறும் 5 கோடி ரூபாய் வசூலித்தால், தெலுங்கில் மட்டும் 100 கோடி கிளப்பில் இப்படம் இணையும். ஆனால், இந்தியில் படத்திற்கு மோசமான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியில் இருந்து மட்டும் 17.5 கோடி ரூபாயை மட்டுமே 'தி ராஜா சாப்' படத்தால் வசூலிக்க முடிந்தது. இதனால் இந்தியில் இப்படம் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
34
தி ராஜா சாப் பட்ஜெட்
'தி ராஜா சாப்' 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் இதன் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமை 160 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, திரையரங்கு உரிமை மூலம் 180 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. பிரபாஸ் நடித்துள்ள இப்படத்தை மாருதி இயக்கி உள்ளார். இருவரும் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு பிரபாஸ் நகைச்சுவை ஜானருக்கு திரும்பும் படமாகவும் 'தி ராஜா சாப்' அமைந்துள்ளது. இது ஒரு ஆக்சன் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. தென்னிந்தியாவின் பிரியமான நடிகை மாளவிகா மோகனன் 'தி ராஜா சாப்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சஞ்சய் தத், போமன் இரானி, நிதி அகர்வால், ரித்தி குமார், ஜரீனா வஹாப், சமுத்திரக்கனி, வெண்ணெல கிஷோர், பிரம்மானந்தம், விடிவி கணேஷ், சத்யா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.