Radhe shyam : இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ரிலீசான பிரபாஸ் படம்... ராதே ஷ்யாமை கொண்டாடும் ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Mar 11, 2022, 06:25 AM IST

Radhe shyam : ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும், பிரபாஸின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

PREV
16
Radhe shyam : இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ரிலீசான பிரபாஸ் படம்... ராதே ஷ்யாமை கொண்டாடும் ரசிகர்கள்

பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தவர் பிரபாஸ். இப்படத்துக்கு இவரது கெரியர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பாகுபலி வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.

26

சாஹோ சறுக்கல்

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாஹோ. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் தோல்வியையும் சந்தித்தது. இப்படத்துக்கு பின் நடிகர் பிரபாஸ் தனது கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

36

ராதே ஷ்யாம் டீம்

அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணக் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தை யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

46

ரூ.100 கோடிக்கு செட்

1970-களில் நடப்பது போல் கதைக்களம் உள்ளதால், இப்படத்திற்காக பிரம்மாண்ட பொருட்செலவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இப்படத்திற்காக போடப்பட்ட செட்-களின் செலவு மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு தமன் பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருக்கிறார்.

56

2.5 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரபாஸ் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக ராதே ஷ்யாம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் அதிகாலை காட்சியை காண ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இருப்பினும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வரவேற்பில்லை என கூறப்படுகிறது. 

66

ரசிகர்கள் கொண்டாட்டம்
 
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும், பிரபாஸின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... samantha Hot :விருது விழாவில் கவர்ச்சி விருந்து கொடுத்த சமந்தாவின் ஹாட் கிளிக்ஸ்! கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories