Lokesh kanagaraj :மாச கடைசில காசிருக்காது... இவன் தான் சோறு போடுவான் - நண்பனோடு லோகேஷ் பகிர்ந்த எமோஷனல் போட்டோ

First Published Mar 10, 2022, 1:07 PM IST

Lokesh kanagaraj : தமிழ் திரையுலகில் பிசியான இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. 

கவனம் பெற்ற மாநகரம்

மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால், முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை தற்போது மும்பைகார் என்ற பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்கின்றனர்.

பிரபலமாக்கிய கைதி

மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி. கார்த்தி நாயகனாக நடித்திருந்த இப்படத்தை பாடல்கள் மற்றும் ஹீரோயின் இன்றி உருவாக்கி இருந்தார் லோகேஷ். இப்படம் விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக ரிலீசாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்படமும் தற்போது இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

விஜய் தந்த வாய்ப்பு

லோகேஷின் கைதி படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன தளபதி விஜய், தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார். கிடைத்த வாய்ப்பை திறம்பட பயன்படுத்திக் கொண்ட லோகேஷ், கில்லி மாதிரி சொல்லி அடித்தார். மாஸ்டர் படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தா லோகேஷ்.

ஹாட்ரிக் ஹிட்

இவ்வாறு வரிசையாக ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்கி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடக்கிறது. 

நண்பனின் உதவி

இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் லோகேஷ், சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி ஓட்டலில் தன் நண்பனுடன் செல்பி எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ள லோகேஷ், ‘என்னுடைய பேவரைட் உணவகம் இது. 2010-ம் ஆண்டு வாக்கில் மாசக்கடைசில இவன் தான் எனக்கு சோறு போடுவான். ஓட்டல் ஓனரை நண்பனாக வைத்திருப்பதே சிறப்பு தான். நன்றி டா ஸ்ரீனி” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Aishwaryaa Rajinikanth : சிம்புவுடன் இணைய போகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு?

click me!