Aishwaryaa Rajinikanth : சிம்புவுடன் இணைய போகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு?

Ganesh A   | Asianet News
Published : Mar 10, 2022, 11:23 AM IST

Aishwaryaa Rajinikanth : தனுஷை பிரிந்த பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் ஐஸ்வர்யா, சமீபத்தில் முசாபிர் என்கிற இசை ஆல்பம் ஒன்றை இயக்கி வெளியிட்டார். 

PREV
14
Aishwaryaa Rajinikanth : சிம்புவுடன் இணைய போகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு?

ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்திய 3

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இதில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானது இந்த படத்தில் தான். குறிப்பாக இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் வைரல் ஹிட் ஆனது.

24

3 ஆண்டுகளுக்கு பின் வை ராஜா வை 

இதையடுத்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் தனுஷ் கிளைமாக்ஸில் கொக்கி குமாராக வந்து மாஸ்காட்டி இருந்தார்.

34

தனுஷுடன் பிரிவு

இப்படத்துக்கு பின் எந்த படங்களையும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா குடும்பத்தை கவனித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ஐஸ்வர்யா. இந்த அறிவிப்புக்கு பின் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் ஐஸ்வர்யா, சமீபத்தில் முசாபிர் என்கிற இசை ஆல்பம் ஒன்றை இயக்கி வெளியிட்டார். 

44

சிம்புவுடன் கூட்டணி

அவர் அடுத்ததாக திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. சிம்புவும், ஐஸ்வர்யாவும் காதலித்ததாகவும் பின்னர் சில காரணங்களால் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு கதையுண்டு. அப்படி இருக்கையில் தற்போது சிம்பு உடனே அவர் பணியாற்ற உள்ளதாக பரவும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படியுங்கள்... Actor Ajith : விபத்தில் காயம்... பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார் அஜித்! - டாக்டர் கூறிய பகீர் தகவல்

Read more Photos on
click me!

Recommended Stories