samantha Hot :விருது விழாவில் கவர்ச்சி விருந்து கொடுத்த சமந்தாவின் ஹாட் கிளிக்ஸ்! கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ!

First Published | Mar 11, 2022, 5:47 AM IST

samantha Hot : நடிகை சமந்தா நேற்று நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் என்கிற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. 

சென்னை பொண்ணு

சென்னையில் பிறந்து வளந்தவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அழகால் ரசிகர்களை கவர்ந்த சமந்தா, பாணா காத்தாடி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இளம் நெஞ்சங்களை கொள்ளைகொண்டார்.

பிரபலமாக்கிய ராஜமவுலி

பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்த நான் ஈ திரைப்படம் இவரை டோலிவுட்டிலும் பிரபலமாக்கியது. இதையடுத்து இவருக்கு டோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. டோலிவுட்டில் பிசியானாலும், தன்னை அறிமுகப்படுத்திய கோலிவுட்டையும் மறக்காமல், தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா.

Tap to resize

விஜய், சூர்யாவுக்கு ஜோடி

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சமந்தா, படிப்படியாக விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன் பின் அவரது மார்க்கெட்டும் கோலிவுட்டில் பன்மடங்கு உயர்ந்தது.

காதல் திருமணம்

பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த சமயத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார் சமந்தா. திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், கடந்தாண்டு பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு தி பேமிலி மேன் என்கிற வெப்தொடரில் நடித்தார்.

கணவருடன் பிரிவு

இந்த வெப் தொடர் தான் அவரது திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த வெப் தொடரில் நடிகை சமந்தா சில நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இது நாக சைதன்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுத்தமாக பிடிக்காமல் போக, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்துக்கு பின் எகிறிய மார்க்கெட்

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாவின் கெரியர் அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்றே சொல்லலாம். இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி கிளாமர் வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருவதால், தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார் சமந்தா. இந்த பட்டியலில் நடிகை நயன்தாரா முதலிடத்தில் உள்ளார்.

கவர்ச்சி தூக்கல்

நடிகை சமந்தா நேற்று நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் என்கிற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அந்த விழாவில் சமந்தா அணிந்து வந்த உடையை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். பச்சை நிற மாடர்ன் கவுனில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Latest Videos

click me!