ஆர்ஆர்ஆர் படத்தின் காட்சிகள் நுணுக்கமாகவும் பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரபாஸ், சில காட்சிகளில் கண்ணீரை அடக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.
நான் ஈ, மாவீரம், பாகுபலி என இந்திய சினிமாவை உலகத்தராத்திற்கு நகர்த்தி சென்றவர் ராஜமௌலி. இவரின் சமீபத்திய வெற்றியாக ஆர்ஆர் ஆர் வெளியானது.
28
RRR
பாகுபலியை போன்றே இந்த படமும் வரலாற்று கதையை மையமாக கொண்டதாகும். சுதந்திர போராட்ட வீரர்களில் கதையில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.
38
RRR
கடந்த மார்ச் 24 ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளிவந்து, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
48
RRR
ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
58
RRR
இந்த படம் வெளியான வெறும் 12 நாட்களின் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்து மாபெரும் சாதனையை படைத்தது.
68
RRR
வசூல் சாதனையை தொடர்ந்து படக்குழுவினர் பிரமாண்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமீர் கான், கரண் ஜோகர், ஜாவித் அக்தர் உள்ளிட்ட சில முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
78
RRR
இந்த படத்தை பார்த்த பிரபாஸ் இயக்குநர் ராஜமௌலியை வெகுவாக பாராட்டியுள்ளார். அதோடு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
88
RRR
அதோடு ஒவ்வொரு சீன்களையும் துல்லியமாக உருவாக்கியுள்ளதாகவும் 10 சீன்கள் தன்னை அழ வைத்ததாகவும், 50 சீன்கள் மெய்சிலிர்க்க வைத்ததாகவும் பிரபாஸ் கூறியுள்ளார்.