இந்திய அளவில் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியிலில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களாக சல்மான் கான், அமீர் கான் மற்றும் அக்ஷய்குமார் இருக்கிறார்கள்.
தமிழகத்தை பொருத்தவரை ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்குகிறார் ஒருபடத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் 60 கோடி முதல் 70 கோடி வரை என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் 80 கோடி சம்பளம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அது உறுதியாக தகவல் இல்லை என கூறப்படுகிறது.
தெலுங்கு திரைப்படங்களில் முன்னனி நடிகரில் ஒருவான பிரபாஸ் 2004ம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்று டார்லிங்,மிர்ச்சி, மிஸ்டர், முன்னா மற்றும் பெர்ஃபெக்ட் போன்ற படங்களின் மூலம் பெரிய வெற்றிகளை பெற்றார்.
2015ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாகுபலி மற்றும் 2017 ஆம் ஆண்டு பாகுபலி 2 படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல படங்களின் சாதனைகளை முறியடித்தது.
மகாநடி இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ள பிரபாஸ், இந்த படத்திற்க்கு 70 கோடி சம்பளம் கேட்டதாகவும், டப்பிங் செய்து விற்கும் உரிமத்திலும் பாதி பங்கு கேட்டதாகவும் டோலிவிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதை வைத்து பார்க்கும் போது அவரது சம்பளம் 100 கோடியை தாண்டிவிடும் எனக்கூறுகிறார்கள்.
இது ரஜினியின் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாகும் என சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. சூப்பர் ஸ்டார் சம்பளத்தை முந்த திட்டமிடும் பிரபாஸை டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் கூட கொஞ்சம் பொறாமையுடன் தான் பார்ப்பதாக பேச்சு.