கர்நாடகா மாநிலம் பெங்களூருவை பூர்விகமாகக் கொண்ட ஷெரின், கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.
நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான
தற்போது 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் ஷெரின், “ஒருவருடம் சில 10 கிலோக்கள் குறைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது தோற்றத்தை பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என சமீபத்தில் கூறியிருந்தார்.
ஸ்லிம் லுக்கிற்கு மாறிய கையோடு ஹோம்லி டூ மார்டன் என பட்டையைக் கிளப்பும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். வீட்டு பால்கனியில் நின்று கொண்டு கால்களை தூக்கியவாறு விதவிதமாக போஸ் கொடுத்துள்ள ஷெரினின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
அதிலும் தொப்புள் தெரிய ஓவர் கிளாமரில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். லைக்குகளை குவிக்கும் அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷெரினை வர்ணித்து வருகின்றனர்.