ராணா - மிஹீகா பஜாஜ் திருமண விருந்தின் மெனு லிஸ்ட் இது தான்... தடபுடலாய் தயாரான கல்யாண சமையல்...!

First Published | Aug 8, 2020, 8:18 PM IST

ராணா - மிஹீகா திருமணத்தில் பரிமாறப்பட உள்ள உணவு வகைகளின் பட்டியல் இதோ... 

பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்தார்.
இதையடுத்து ஒட்டுமொத்த திரையுலகையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மிஹீகாவை மணமுடிக்க போகிறார் ராணா.
Tap to resize

ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடீயோவில் திருமணம் நடைபெறுகிறது. தெலுங்கு திரையுலகின் பெரிய வீட்டு கல்யாணம் என்றாலும் கொரோனா காரணமாக 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திருமணம் தெலுங்கு-மார்வாரி கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பாக நடைபெறவுள்ளது.
திருமணத்தில் பங்கேற்க போவது சொற்ப நபர்கள் என்றாலும் விருந்து லிஸ்டை பார்த்தால் தலை சுற்றுகிறது.
பெண்ணின் மார்வாரிகள் முறைப்படிகச்சோரிஸ், பக்கோராஸ், தால்-பாத்தி சுர்மா, லால் மாஸ், கட்டே கி சப்ஸி என ராஜஸ்தானி உணவுகள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் ராணாவின் தெலுங்கு பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக , பெசரா பப்பு, பச்சி புலுசு, பப்புச்சாரு போன்ற உணவுகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பஞ்சாபி உணவு வகைகளான சிக்கன், தால் மக்கானி, கடாய் பன்னீர் ஆகிய ஐயிட்டங்களும் விருந்தில் இடம் பெற்றுமாம்.

Latest Videos

click me!