Prabhas starrer Salaar film trailer to release on 1st December
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று 'சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உட்சாகப்படுத்தியுள்ளது. பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் நடிக்கும் 'சலார் -பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் வசீகரிக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டருடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருக்கிறார்கள்.
புதுச்சேரியில் அதிரடியாக உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட் ரேட்! எவ்வளவு உயர்வு தெரியுமா ?
Actor Prabhas starrer Salaar ott rights sold at whopping amount
இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா அனுபவங்களில் சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயரும் ஒன்றாகும். இந்த திரைப்படம் 'கே ஜி எஃப்' என எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், பாகுபலி சூப்பர் ஸ்டார் பிரபாஸ், 'கே ஜி எஃப்', 'காந்தாரா' ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் ஆகியவற்றின் கூட்டணியில் உருவாகியுள்ளது.
'மாஸ்டர் ஆஃப் ஆக்சன்' பிரசாந்த் நீல், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் முதன் முறையாக இது போன்ற காவிய படைப்பில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த கூட்டணி அதிரடி படைப்புகளை வழங்குவதை உறுதியளிக்கிறது. மேலும் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' திரைப்படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. உலகெங்கும் உள்ள திரைப்பட பார்வையாளர்களுக்கு 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்' சிறந்த கிறிஸ்மஸ் பரிசாக அமையும் என்பது உறுதி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D