Poornima Ravi Talk About Yellow Movie : பூர்ணிமா ரவி, மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், வைபவ் முருகேசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் Yellow படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
யூடியூப் மற்றும் பிக்பாஸ் பிரபலமான பூர்ணிமா ரவி நடிப்பில் வெளியான தயாரான படம் தான் யெல்லோ. முழுக்க முழுக்க வித்தியாசமான கதை மற்றும் காட்சிகளை கொண்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பூர்ணிமா ரவி முன்னணி ரோலில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து டெல்லி கணேஷ் (மறைவு), வைபவ் முருகேசன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், சாய் பிரசன்னா என்று ஏராளமான பிரபலங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் Yellow.
26
யெல்லோ, பூர்ணிமா ரவி
முழுக்க முழுக்க மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைத்துள்ளார். கோவை பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலமாக பிரசாந்த் ரங்கசாமி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வரும் 21ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய நடிகை பூர்ணிமா ரவி இந்தப் படம் எல்லோருக்கும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றிய எல்லோருமே ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று தேடி அழைத்தோம்.
36
யெல்லோ டிரைலர்
தயாரிப்பாளருக்கு பெரிய நடிகரின் கால்ஷீட் தேவைப்படும். இதே போன்று ஒரு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் ஒரு நடிகருக்கு ஆசை இருக்கும். இதே போன்று தான் ஒரு இயக்குநருக்கு பெரிய தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். அவருடைய தயாரிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
46
யெல்லோ இசை வெளியீட்டு விழா
அப்படி எங்க எல்லோருக்குமே அந்த ஆசை இருக்கிறது. எல்லோருமே வாய்ப்பை தேடிக் கொண்டு தான் இருந்தோம். அப்படி நாங்கள் ஒரு வாய்ப்பை உருவாக்கி நாங்கள் செய்திருக்கும் படம் தான் Yellow. இந்தப் படம் சின்ன படம், பெரிய படம் என்பதையெல்லாம் தாண்டி நாங்கள் இந்தப் படத்தில் நடித்து முடித்து இப்போது உங்களது முன் நாங்கள் நிற்பதற்கு பெருமை கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
56
யெல்லோ மூவி ரிலிஸ் தேதி
இந்த உலகத்தில் 2 விதமான மக்கள் இருக்கிறார்கள். ஒன்று கஷ்டத்தை நினைத்து எதிர்காலத்தை கோட்டைவிடுவது. மற்றொருன்று அந்த கஷ்டத்தையே புதிய பாதையாக மாற்றி அதில் டிராவல் பண்ணவது. இந்த 2 வேறுபட்ட கதைகளை காட்சிகளாக எடுத்துள்ளார் இயக்குநர்.
66
யெல்லோ
இந்தப் படத்தில் கஷ்டப்படும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூர்ணிமா ரவி, பின்னர் புதிய பாதையை உருவாக்கி அதில் பயணிக்கிறார். அப்போது அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தோடு கதை. முழுக்க முழுக்க வித்தியாசமான மற்றும் எதார்த்தமான கதைகளை மையப்படுத்திய இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.