3 Top Actors Who Missed Autograph Movie: 'ஆட்டோகிராப்' திரைப்படம் இந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படம் குறித்த சில சுவாரஸ்ய விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
ஒரு துணை இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, இயக்குனராக மாறியவர் தான் சேரன். இவரை ஒரு ஹீரோவாக மாற்றிய திரைப்படம் என்றால் அது 'ஆட்டோகிராப்'. 2004-ஆம் ஆண்டு சேரன் இயக்கி, கதை எழுதி, தயாரித்து, இந்த படத்தில் நடித்திருந்தார். இவர் தன்னுடைய கடின உழைப்பை கொட்டி எடுத்ததன் பலனாக இப்படம், விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் லாபம் பார்த்தது.
26
எதார்த்தமான காதல் கதை:
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வரும் பள்ளி பருவ காதல், கல்லூரி காதல், நட்புகள் மற்றும் திருமணம் என எதார்த்தமான கதையை தான் சேரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக மல்லிகா, கோபிகா, சினேகா, மற்றும் கன்னிகா ஆகியோர் நடித்திருந்தனர். 'ஆட்டோகிராப்' திரைப்படம் சேரனுக்கு 2 தேசிய விருதுகளையும் பெற்று கொடுத்தது.
36
3 ஹீரோக்களிடம் கதை சொன்ன சேரன்:
இந்த படத்தின் கதையை எழுதும் போது... நாம் தான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க போகிறோம் என சேரன் நினைத்து கூட பார்க்கவில்லை என்பதே உண்மை. ஆம் இந்த படத்தின் கதையை 3 ஹீரோக்களிடம் சேரன் கூறியதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் ஒரு டாப் ஹீரோ மட்டும், நடிப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு... தான் நடித்த ஆக்ஷன் படம் ஹிட் அடித்ததால் 'ஆட்டோகிராப்' படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி காலைவாரி விட்டுள்ளார்.
46
No சொன்ன விக்ரம்:
அதாவது 'சேரன்' இந்த படத்தின் கதையை முதல் முதலில், நடிகர் விக்ரமிடம் தான் கூறியுள்ளார். காசி படத்தை தொடர்ந்து ஜெமினி படத்தில் நடித்து வந்ததால், தன்னுடைய அடுத்த படமாக 'ஆட்டோகிராப்' இருக்கும் என சேரனுக்கு வாக்குறுதியும் கொடுத்தாராம். விக்ரம் பேச்சை நம்பி சேரனும் கார்த்துக்கொண்டிருக்க, விக்ரம் ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்த 'ஜெமினி' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை பார்ப்பதால், இது போன்ற காதல் கதைகளில் நடிக்க முடியாது என கூற, சேரனும் வேறு ஹீரோக்களை தேட துவங்கி இருக்கிறார்.
56
சூழ்நிலையால் நழுவ விட்ட 2 நடிகர்கள்:
அதன்படி பிரபுதேவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் கதையை கூறியுள்ளார். அவர்கள் இருவருக்குமே கதை பிடித்திருந்தாலும், ஏற்கனவே கமிட் ஆன படங்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. பொறுத்தது போதும் என ஒரு கட்டத்தில் தானே நடிக்க முடிவு செய்தார். சேரன் ஹீரோ என்பதால், தயாரிப்பாளர்கள் இவரை நம்பி பணம் போட தயக்கம் காட்டியுள்ளனர். எனவே கடன் உடன் பட்டு தான் 'ஆட்டோகிராப்' படத்தை தயாரித்தார். இவரின் திறமைக்கு மணிமகுடமாக இந்த படம் மாறியது மட்டும் இன்றி, வசூலிலும் கொள்ளை லாபம் பார்த்தது.
66
ஃபீல் பண்ணினாரா விக்ரம்?
எந்த ஒரு நல்ல கதையையும் மிஸ் பண்ணிவிட்டு கூடாது என நினைக்கும் விக்ரம் கண்டிப்பாக இந்த படத்தை மிஸ் பண்ணியதற்கு பீல் பண்ணி இருப்பார் என்பதே ரசிகர்களின் கருத்து. அதே போல் பிரபு தேவா அல்லது ஸ்ரீகாந்த் இந்த படத்தில் நடித்திருந்தால், அவர்களின் திரையுலக வாழ்க்கையில் இப்படமும் ஒரு மாஸ்டர் ஃபீஸாக இருந்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.