Poorna : ஒரு சீன்ல மட்டும் நிர்வாணமாக நடிக்க சொல்லி என்னை அணுகினார்கள்... ஓப்பனாக சொன்ன நடிகை பூர்ணா

First Published May 7, 2022, 3:11 PM IST

Poorna : நிர்வாண காட்சியில் நடிக்கச் சொல்லி உங்களை யாராவது அணுகியதுண்டா என்கிற கேள்விக்கு, ஆம் என பதிலளித்த பூர்ணா, அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் விளக்கினார்.

பரத்தின் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூர்ணா. இதையடுத்து இவர் நடிப்பில் கந்தக்கோட்டை, வித்தகன், தகராறு, சவரக்கத்தி, காப்பான் போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை பூர்ணா நடிப்பில் அண்மையில் வெளியான விசித்திரன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூர்ணா. இதையொட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பூர்ணாவிடம், பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா 20 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க மறுத்திவிட்ட பூர்ணா, படம் ரிலீசாகும் போது உங்களுக்கு தெரியும் என கூறினார்.

இதையடுத்து, இதுபோன்று நிர்வாண காட்சியில் நடிக்கச் சொல்லி உங்களை யாராவது அணுகியதுண்டா என்கிற கேள்விக்கு, ஆம் என பதிலளித்த பூர்ணா, அதுகுறித்து விளக்கினார். பெரிய ஓடிடி தளத்தில் இருந்து எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. அந்த வெப் தொடரின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனால் அதில் ஒரு முக்கியமான காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க வேண்டி இருந்தது. அதனால் அந்த தொடரில் நடிக்க மறுத்துவிட்டேன். 

மிகவும் வருத்ததோடு தான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறினேன். ஏனெனில் அந்த கதை எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த காட்சி அந்த தொடருக்கு மிகவும் முக்கியமானது ஆனால் அதனை என்னால் நடிக்க முடியாது மன்னித்துவிடுங்கள் என இயக்குனரிடம் கூறியதாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Michael first look : சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் கெத்து காட்டும் சந்தீப் கிஷான்- வைரலாகும் மைக்கேல் பர்ஸ்ட் லுக்

click me!