தமிழில் மிருகம், அய்யனார், அரவாண் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் ஆதி. இவர் தற்போது பிறமொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் மலர்ந்தது. தமிழில் ஜிவி பிரகாஷின் டார்லிங் படம் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணி, கலகலப்பு 2, ஹரஹர மகாதேவகி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆதியுடனுன் இணைந்து மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க படத்தில் நடித்திருந்தார் நிக்கி.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது. இந்த நிகழ்வில், இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகின.