கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து சந்திரமுகி, கஜினி, சிவகாசி என குறுகிய காலத்திலேயே ரஜினி, சூர்யா, விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.