புத்தகப் பிரியர்களால் காலம் கடந்து கொண்டாடப்படும் சிறந்த நாவல்கள் ஒன்று கல்கியின் கைவண்ணத்தால் உருவான 'பொன்னியின் செல்வன்' நாவல். இந்த நாவலை, படமாக்க எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற ஜாபவான்கள் முயற்சித்த நிலையில்... இந்த பிரம்மாண்ட படைப்பை அவர்களால் ஒரு சில காரணத்தால் படமாக்க முடியாமல் போனது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இப்படத்திற்கான பட்ஜெட் எனலாம்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில், பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாக படமாக்கி முடித்தார் மணிரத்னம். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது இரண்டாம் பாகம். 5 பாகங்கள் கொண்ட ஒரு பிரமாண்ட நாவலை எப்படி இயக்குனர் மணிரத்னம் நிறைவு செய்திருப்பார் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு படையெடுத்தனர் ரசிகர்கள்.
பொன்னியின் செல்வன் 2, திரைப்படம் வெளியாகி 15 நாட்களை எட்ட உள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 330 கோடி தான் வசூலித்துள்ளதாம். இது முதல் பாகத்தை விட மிகவும் குறைவு என கூறப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் குறைத்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.