இதுகுறித்து மும்பையில் உள்ள பவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஜெனிபர், தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தன்னை தனியாக ரூமுக்கு வா சரக்கடிக்கலாம் என அழைத்ததது மட்டுமின்றி அடிக்கடி தன்னிடம் ஆபாசமாக பேசி, தவறாக தொட்டு எல்லைமீறி நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காமல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அந்த தொடரை விட்டு வெளியேற முயன்றதாகவும், அப்படி விலகினால் தனது 4 மாத சம்பளத்தை பிடித்தம் செய்வோம் என அந்த தொடரின் இணைத் தயாரிப்பாளர்கள் தன்னை மிரட்டியதாகவும் ஜெனிபர் கூறினார்.
இதையும் படியுங்கள்... Good Night Movie Review : இனிமே குறட்டை விடுவீங்க...! ''குட் நைட்'' திரைவிமர்சனம்!