வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: உடல் நலம் தேறி வரும் பொன்னம்பலம்!

Published : Feb 14, 2023, 06:04 PM IST

நடிகர் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து அவர் உடல் நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.  

PREV
15
வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: உடல் நலம் தேறி வரும் பொன்னம்பலம்!
பொன்னம்பலம்

பிரபு நடித்த கலியுகம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம். இந்தப் படத்தைத் தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், வெற்றி படிகள், புது மனிதன், தாய் மாமன், கூலி, சிம்மராசி, நாட்டாமை, அமர்க்களம், தை பொறந்தாச்சு, நாயக், பகவதி என்று எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். நாட்டாமை, முத்து, அமர்க்களம் ஆகிய படங்கள் பொன்னம்பலத்திற்கு மாஸ் ஹிட்டான படங்களாக அமைந்தன.

25
பொன்னம்பலம்

தமிழைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சரத்குமார், அர்ஜூன் என்று பிரபலங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் ஸ்டண்ட்மேனாக அறிமுகமான பொன்னம்பலம் கடந்த சில வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

35
பொன்னம்பலம்

அதுமட்டுமின்றி நிதி நெருக்கடியாலும் சிக்கி தவித்து வந்துள்ளார். சிறுநீரக பாதிப்பு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக பல முறை அவர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இதையடுத்து, தனுஷ், கமல் ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், கே எஸ் ரவிக்குமார், அர்ஜூன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபு தேவா என்று சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மருத்துவ செலவுக்கு நிதியுதவி அளித்தனர்.c

45
பொன்னம்பலம்

இந்த நிலையில், தான் குறும்பட இயக்குநர் ஜெகநாதன் (35) தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன் வந்தார். இதன் காரணமாக ஜெகநாதன் கடந்த 6ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

55
பொன்னம்பலம்

இதையடுத்து, கடந்த 10 ஆம் தேதி பொன்னம்பலத்திற்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவர் உடல் நலம் தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நடிகர் பொன்னம்பலம் தனது பிஆர் மேனேஜர் மூலமாக தனக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து உதவியவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories