Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?

Published : Nov 02, 2026, 09:48 PM IST

Pongal Release Movies List : தீபாவளி பண்டிகை முடியும் முன்பே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் ஒவ்வொன்றாக வெளியாகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
16
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் அப்போது புதுப்படங்களும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும். அந்த வகையில் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் தற்போது வெளிவரத் தொடங்கி உள்ளன. அதில் அஜித் குமார், விஷால், கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. அந்த பட்டியலை பார்க்கலாம்.

26
கிளாடியேட்டர்ஸ்

நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆவணப்படம் தான் கிளாடியேட்டர்ஸ். இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தான் தயாரித்துள்ளார். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் ஏராளமான பிரபலங்களின் கேமியோ இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் இந்த படத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாம். இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.

36
இந்தியன் 3

பொங்கல் ரேஸில் இடம்பெறும் மற்றொரு படம் இந்தியன் 3. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இப்படத்தை சமீபத்தில் கையிலெடுத்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இப்படம் ரிலீஸ் ஆவதால் தான் ரஜினிகாந்தின் தர்மன் பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ளதாம்.

46
புருஷன்

நடிகர் விஷால் ஹீரோவாக நடித்துள்ள புருஷன் திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அதிரடி, ஆக்‌ஷன் கலந்த காமெடி திரைப்படமாக இருக்கும் என்பது இதன் அறிவிப்பு புரோமோவிலேயே தெரிந்தது. இப்படமும் பொங்கல் ரேஸில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

56
வேட்டுவம்

பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் வேட்டுவம். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் கலையரசன், ஷபீர், ஜான் விஜய், சோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இதுவரை பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ஒரே படம் வேட்டுவம் தான். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை தேவானந்த், வெங்கடேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து பா இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

66
டிமாண்டி காலனி 3

பொங்கல் ரேஸில் களம் காண காத்திருக்கும் மற்றொரு திரைப்படம் டிமாண்டி காலனி 3. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பெரிய படங்கள் வருவதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில், இப்படமும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories