பீஸ்ட் டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ள அரசு அனுமதி .. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Kanmani P   | Asianet News
Published : Apr 09, 2022, 03:16 PM ISTUpdated : Apr 09, 2022, 03:34 PM IST

பீஸ்ட் படத்திற்காக முதல் ஐந்து நாட்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள பாண்டிச்சேரி அரசு அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.

PREV
18
பீஸ்ட் டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ள அரசு அனுமதி .. அதிர்ச்சியில் ரசிகர்கள்
beast

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய் வீரராகவன் என்னும் பெயரில் நடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோரும் இதில் உள்ளனர். 

28
beast

அனிரூத் இசையமைப்பில் உருவாகிய அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதில் ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு....Beast Vs KGF 2 : டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் KGF 2... விஜய்யின் பிடிவாதத்தால் சரிவை சந்திக்கும் பீஸ்ட்
 

38
beast

பாடல்கள் வெளிவரும் முன்னர் டாக்டர் பாணியில்  சிவகார்த்திகேயன் எழுதிய  அரபிக் குத்து பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

48
beast

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கும் மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது. 

58
beast

பீஸ்டட் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும் என்னும் துவங்கும் இந்த பாடலை விவேக் எழுத இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு....முடிவுக்கு வருகிறது RRR படத்தின் வசூல் வேட்டை... ரூ.1000 கோடி வசூலித்தும் ‘பாகுபலி 2’ சாதனையை பீட் பண்ண முடியல

68
beast

இதற்கிடையே டிக்கெட் விற்பனையும், ப்ரோமோஷன் வேலைகளையும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக வெளி நாடுகளில் துவங்கிய டிக்கெட் விற்பனையில் அதிக விலை ஏற்றப்பட்டதாக புகார் கிளம்பியது.

78
beast

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் விஜயை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். விஜய் கலந்து கொள்ளாத காரணத்தால் வெளிமாநிலங்களில் பீஸ்ட் மவுசு குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

88
beast

தமிழ்,இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய  5 மொழிகளில் பான் இந்தியா படமாக   வருகிற ஏப்ரல் 13-ந் தேதி இப்படம்  ரிலீசாக உள்ளது. இந்நிலையில்  பீஸ்ட் படத்திற்காக முதல் ஐந்து நாட்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள pondicherry  அரசு அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories