அரசியல்வாதி வீட்டு மருமகள் ஆனார் மேகா ஆகாஷ்! பிரபலங்கள் புடைசூழ நடந்த திருமணம் - போட்டோஸ் இதோ

Published : Sep 15, 2024, 02:25 PM IST

Megha Akash Marriage Photos : நடிகை மேகா ஆகாஷுக்கும் அரசியல்வாதி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுக்கும் இன்று திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

PREV
15
அரசியல்வாதி வீட்டு மருமகள் ஆனார் மேகா ஆகாஷ்! பிரபலங்கள் புடைசூழ நடந்த திருமணம் - போட்டோஸ் இதோ
Megha Akash Wedding

ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் மேகா ஆகாஷ். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர், அடுத்த ஆண்டே நடிகர் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் விஜய் சேதுபதி, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

25
Megha Akash Weds Saai vishnu

இவருக்கும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடிக்கு கடந்த மாதம் சென்னையில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டு அரசியல்வாதி மகனுடன் காதல் மலர்ந்தது எப்படி? மேகா ஆகாஷின் 6 வருட லவ் ஸ்டோரி

35
Megha Akash Marriage Photos

இதையடுத்து மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்பட அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

45
MK Stalin at Megha Akash Wedding reception

பின்னர் மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு ஜோடியின் திருமணம் இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தங்க நிற பட்டுச்சேலையில் மேகா ஆகாஷ் அழகு தேவதையாக ஜொலிக்க, தாலி கட்டியதும் அன்பு மனைவிக்கு முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினார் சாய் விஷ்ணு.

55
Udhayanidhi Stalin at Megha Akash Wedding reception

காதலனை கரம்பிடித்துள்ள நடிகை மேகா ஆகாஷுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அவரின் திருமண புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளதாக நடிகை மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஆத்தாடி ஒரு படத்துக்கு 275 கோடியா? இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் இதோ

click me!

Recommended Stories