ஆத்தாடி ஒரு படத்துக்கு 275 கோடியா? இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் இதோ

First Published | Sep 15, 2024, 1:22 PM IST

Top 10 Indian actors salary : இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் பற்றியும், அவர்கள் தற்போது எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 10 Indian actors salary

நடிகைகளைக் காட்டிலும் நடிகர்களின் சம்பளம் தான் படத்துக்கு படம் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிலும் நடிகைகள் 10 கோடி சம்பளத்தை தாண்டாத நிலையில், நடிகர்கள் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி மாஸ் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்களின் பட்டியலை பார்க்கலாம். இதில் முதலிடத்தில் தமிழ் நடிகர் தான் இருக்கிறார். அந்த பட்டியல் இதோ.

Vijay

1. விஜய்

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் கடந்த மாதம் வரை நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.275 கோடி சம்பளமாக வாங்குகிறார். இந்தியாவில் இதுவரை எந்த நடிகரும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை. குறிப்பாக ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் அவெஞ்சர் எண்ட் கேம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விட இது அதிகமாகும். அவர் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு ரூ.168 கோடி வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 69 படத்துக்காக தான் விஜய் 275 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

2. ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷாவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக ஜவான் திரைப்படம் வெளியானது. அட்லீ இயக்கிய இப்படத்திற்காக ஷாருக்கானுக்கு ரூ.250 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இவர் நடிப்பில் தற்போது கிங் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

3. ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வேட்டையன் மற்றும் கூலி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் கூலி படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 210 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

Prabhas

4. பிரபாஸ்

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரபாஸ் தொடர் தோல்வியை சந்தித்தார். அதன்பின் சலார் படத்தின் வெற்றி மூலம் மீண்டும் பார்முக்கு வந்த நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD என்கிற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்காக அவர் ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இதன்மூலம் அவர் இந்த பட்டியலில் 4ம் இடம் பிடித்துள்ளார்.

5. அமீர்கான்

பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் அமீர்கான். இந்த பட்டியலில் இவர் 5ம் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்திற்காக ரூ.175 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார் அமீர்கான். அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகள் அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், தற்போது மகாராஜா படத்தின் இந்தி ரீமேக்கில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது குத்தமா? நடிகர் விஜய்யை நெட்டிசன்கள் வறுத்தெடுப்பது ஏன்?

Kamalhaasan

6. சல்மான் கான்

பாலிவுட்டில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். அவர் நடிப்பில் தற்போது சிக்கந்தர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் சல்மான் கான் ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

7. கமல்ஹாசன்

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. அப்படம் படுதோல்வியை சந்தித்தாலும் அதற்காக ரூ.150 கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறார் கமல். இதன்மூலம் இந்த பட்டியலில் 7ம் இடம்பிடித்துள்ளார் கமல். இதுதவிர அவர் கைவசம் தக் லைஃப், கல்கி 2 போன்ற படங்களும் உள்ளன.

8. அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன புஷ்பா திரைப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு ரூ.125 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம் அல்லு அர்ஜுன்.

Ajith

9. அக்‌ஷய் குமார்

பாலிவுட்டில் சமீப காலமாக அதிக பிளாப் படங்களை கொடுத்தவர் என்றால் அது அக்‌ஷய் குமார் தான். அவர் பிளாப் படங்களை கொடுத்தாலும் அவருக்கான மவுசு குறையவில்லை. அவர் நடிப்பில் கடைசியாக சர்பிரா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது தமிழில் சூர்யா நடித்து ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்திற்காக ரூ.120 கோடி சம்பளம் வாங்கினாராம் அக்‌ஷய்.

10. அஜித்குமார்

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் 10 வது இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் உருவாகி இருக்கின்றன. இப்படங்களுக்கு முன்னர் வரை நடிகர் அஜித் ஒரு படத்துக்கு ரூ.110 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மணிமேகலை உடனான சண்டைக்கு பின் சாதித்து காட்டிய பிரியங்கா... குக் வித் கோமாளி டாப் 3 பைனலிஸ்ட் இவங்கதான்

Latest Videos

click me!