மணிமேகலை உடனான சண்டைக்கு பின் சாதித்து காட்டிய பிரியங்கா... குக் வித் கோமாளி டாப் 3 பைனலிஸ்ட் இவங்கதான்

First Published | Sep 15, 2024, 11:08 AM IST

Cook With Comali 5 Top 3 Finalist : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் அரையிறுதி சுற்றில் வெற்றிபெற்று பைனலுக்குள் நுழைந்தது யார் என்பதை பார்க்கலாம்.

cook with comali Top 3 Finalist

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன், சர்ச்சைகளும் சண்டைகளும் நிறைந்த சீசனாகவே உள்ளது. இந்த சீசன் தொடங்கமே சர்ச்சைகளுடன் தொடங்கியது. கடந்த நான்கு சீசன்களாக இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் அவருக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக வைத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொடங்கினர்.

Sujitha Dhanush

பின்னர் இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட நாஞ்சில் விஜயன், திடீரென நிகழ்ச்சியை விட்டு விலகினார். சில பிரச்சனைகளால் தான் விலகியதாக அவர் சொன்னாலும் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை. பின்னர் நேற்று இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய மணிமேகலை இதில் இருந்து பாதியில் விலகிச் சென்றார். அவருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தார் மணி.

இதையும் படியுங்கள்... நான் வேலை தெரிஞ்சவ எங்க போனாலும் பொழச்சுப்பேன்; ஆனா அவங்க! பிரியங்காவுக்கு மணிமேகலை தந்த நெத்தியடி ரிப்ளை

Tap to resize

Irfan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது ஒருபக்கம் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டாலும், மறுபுறம் இந்த வாரம் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றது யார் என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டின. அந்த வகையில் சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, இர்பான், அக்‌ஷய் கமல் ஆகிய நால்வருக்கு இடையே இந்த அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இர்பான் தான் அட்வாண்டேஜ் டாஸ்க்கில் வெற்றி பெற்றார்.

Priyanka Deshpande

அடுத்ததாக இன்று நடைபெற்ற மெயின் குக்கிங்கில் அசத்தலாக சமைத்து மூன்று போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். அதன்படி சுஜிதா தனுஷ் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார். அடுத்ததாக பிரியங்கா செல்ல, மூன்றாவதாக இர்பான் மற்றும் அக்‌ஷய் கமலுக்கு இடையே இர்பான் வெற்றிபெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதன்மூலம் இந்த அரையிறுதியில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட அக்‌ஷய் கமல், எலிமினேட் ஆனார்.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் இருந்தபடி... இசைக்கருவிகள் இன்றி இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாட்டு - அடடே இதுவா?

Latest Videos

click me!