Manimegalai vs Priyanka Deshpande
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார் மணிமேகலை. அவர் சனிக்கிழமை ஒளிபரப்பான அரையிறுதி சுற்றின் முதல் எபிசோடில் பாதியிலேயே சென்றுவிட்டார். தவிர்க்க முடியாத காரணாத்தினால் மணிமேகலை சென்றுவிட்டதாக நிகழ்ச்சியில் ரக்ஷன் சொன்னாலும், அதன்பின்னணியில் பெரிய சண்டையே நடந்திருக்கிறது.
பிரியங்கா அடிக்கடி தன்னுடைய பணியில் குறுக்கிடுவதாகவும், தொடர்ந்து அவர் தனது ஆதிக்கத்தை காட்டி வருவதாலும் அது பிடிக்காததாலும், சுய மரியாதை முக்கியம் என்பதாலும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இருப்பினும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டிவந்த நிலையில், அதற்காக தன் யூடியூப் பக்கத்தில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
Manimegalai quits cook with comali
அதில் அவர் கூறியதாவது : “2009-ம் ஆண்டு நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதே சன் மியூசிக்கில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 17 வயசு தான். அப்போதிலிருந்து இப்போ வரை சுமார் 15 ஆண்டுகள் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக குக் வித் கோமாளியில் பணியாற்றினேன். முதல் 3 சீசனில் கோமாளியாகவும், கடந்த 2 சீசன்களாக தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தேன்.
இந்த சீசனில் நான் ஆங்கராக முதலில் நுழைந்த நாள் முதல் நேற்று வெளியேறிய நாள் வரை நிறைய டாமினேஷன் இருந்தது. நான் பேசுவதை தாண்டி எனக்கு தான் எல்லாமே தெரியும், நான் இதை பார்த்துக் கொள்கிறேன் என என்னுடைய வேலையில் மூக்கை நுழைத்தார். ஓரிரு எபிசோடில் அதை நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் அதையும் மீறி நம்முடைய வேலையில் தலையிடுகிறார்கள் என்றால் அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது.
இதையும் படியுங்கள்... தனியா வரச்சொன்னார்; என்ன பார்த்ததும் வேர்த்து கொட்டீருச்சு - வைரமுத்துவின் லீலைகளை அவிழ்த்துவிட்ட சுசித்ரா
Manimegalai
இந்த ஷோவில் ஒரு ஆங்கர் (பிரியங்கா) போட்டியாளராக இருக்கிறார். ஆனால் அவர் போட்டியாளராக மட்டும் இல்லாமல் நிறைய விஷயங்களை செய்தார். நான் டீமிடமும் இதை தெரியப்படுத்தினேன். அவங்களும் நிறைய இடங்களில் சொன்னார்கள். ஆனாலும் அவரின் தலையீடு அதிகமாக இருந்ததால், நேரடியாக அவரிடமே இதை சொல்லிவிட்டேன். உடனே அது எப்படி நான் ஒரு சீனியர், என்னிடம் நீ அப்படி சொல்லலாம் என கேட்டார்.
நீங்க என்னவேனாலும் பேசிக்கலாம், நான் எதுவும் சொல்ல மாட்டேன்னு நான் சொல்ல வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் நான் அப்படி செய்ய மறுத்துவிட்டேன். மத்தவர்களுக்காக இறங்கி வரமாட்டேன்னு நான் ஸ்டிரிக்ட் ஆக சொல்லிவிட்டேன். இதுமாதிரி செய்தால் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும், நிறைய ஷோக்கள் கிடைக்கும்னு சொன்னாங்க. நான் நினைத்திருந்தால் ஓகே சொல்லிருக்கலாம். நான் அதெல்லாம் எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டேன்.
Anchor Manimegalai
பின்னர் உங்களின் இந்த முடிவால் உங்களுக்கு இழப்பு ஏற்படலாம். உங்களின் கெரியர் கூட போகலாம் என சொன்னார்கள். நான் நினைத்தால் யாரவேணா என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்வதற்கு யாருக்குமே பவர் கிடையாது. அவங்க பெரிய ஆள்னு சொல்றாங்க. அந்த ஃபீலும் எனக்கு வரல. நீங்க அவங்களுக்கு அடங்கிப்போனால் உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்க. அதிலும் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை.
அப்படி ஒரு வேலையே வேணாம். அதுக்கு நான் வீட்லயே சும்மா உட்கார்ந்திருவேன். யார் பொழப்பையும் கெடுக்காம இருந்தா, நமக்கு எல்லாமே நல்லதா கிடைக்கும்னு நம்புறவ நான். எப்படி விட்டாலும் நான் பொழச்சுப்பேன். அவங்க பொழப்பு நடத்த இதைவிட்டால் வேறு வழி தெரியாமல் இருக்கலாம். அதுனால கூட அவங்க ஆதிக்கம் செலுத்தி இருக்கலாம். அவங்கள ரிவெஞ் எடுக்க டைம் இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு. அவங்களுக்கு நிறைய ஷோக்கள் கிடைக்க வாழ்த்துகிறேன். எல்லா நிகழ்ச்சிகளையும் அவர்களே தொகுத்து வழங்கட்டும்” என சொல்லி நெத்தியடி ரிப்ளை கொடுத்துள்ளார் மணிமேகலை.
இதையும் படியுங்கள்... "ரொம்ப டாமினேட் பன்றாங்க" பிரபல பெண் ஆங்கரால் CWCல் இருந்து விலகிய மணிமேகலை - ஷாக்கிங் இன்ஸ்டா பதிவு!