தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ள விஜய், அதற்கான பணிகளையும் சைடு கேப்பில் செய்து வருகிறார். அண்மையில் இக்கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. அதில் கட்சி கொடியையும், கட்சிப் பாடலையும் அறிமுகம் செய்துவைத்தார் விஜய். விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஏதேனும் பண்டிகைகள் வந்தால் அதற்கு வாழ்த்து சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிடும் விஜய், விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு போன்ற தமிழகர்களின் முக்கிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில், இன்று மலையாளிகளின் முதன்மை பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்!' என குறிப்பிட்டு உள்ளார்.